14.10.2024 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சிபி ஆதித்யா செந்தில் குமார் I.A.S அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் IRCS கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S மணிகண்டராஜன் – அவர்கள் மற்றும் BS SMART கல்வி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தன்னார்வலர்கள் ஸ்டாலின், சரவணகுமார், மணிபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.