“08.04.2024 அன்று விருத்தாசலத்தில் வசிக்கும் முதியவர் தன் உடலை சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவமனைக்கு அவரது இறப்பிற்கு பிறகு தனது உடலை தானமாக வழங்குவதாக நமது நிறுவனத்தின் முலமாக பதிவு செய்துள்ளார்.ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் முதியவரை சால்வை அணிவித்து கௌரவித்தார் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் உடல் தான சிறப்பை பற்றி அவர்களுக்கு கூறினார்கள்.”