“விருத்தாசலம் 07.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BSS MART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விருத்தாசலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட சுய தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் திருமதி.அபிநயா அவர்கள் – MBBS,M.S (OG) Assistant Surgeon Virudhachalam G.H, காவல் ஆய்வாளர் திருமதி.கீதா – MPES அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையம்,விருத்தாசலம் மற்றும் வேந்தர் டி வி புகழ் காயத்திரி – அவர்கள் DEC.,B.Lit பட்டிமன்ற பேச்சாளர் ஆரணி ஆகியோர் கலந்து கொண்டு கிராம பெண்களுக்கு சிறப்புரை வழங்கினார்கள். ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் M.A., B.Ed., அவர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தலைமை தாங்கி நடத்தினார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை பற்றி விழிப்புணர்வு உரை வழங்கினார். ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் M.A.,B.L ., – அவர்கள் நன்றியுரையாக பெண்களின் உரிமை சட்டத்தின் சிறப்புரை வழங்கினார். மேலும் கலந்து கொண்ட அனைத்து சிறு தொழி செய்யும் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த விழாவில் தொகுத்து வழங்கினார், மேலும் கிளை மேலாளர் அன்பானந்தம் திட்ட மேலாளர் சரவணகுமார்மேலாளர் மணிபாலன், மாரிமுத்து,இளையராஜா,செல்வகுமார்,சீதா, லட்சுமி,அனிதா ஆனந்தராஜ், வினோதினி, அனிதா சேஷன்,சியாமளா,அஸ்வத்தனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்”