“30.09.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம்,BS SMART கல்வி மையம் மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – புதுச்சேரி இணைந்து கண் மற்றும் இருதய மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.இந்த முகாமில் 13கும் மேற்பட்ட மருத்துவர்கள் வரவழைக்கபட்டனர் 200க்கும் மேற்பட்ட நோய்யாளிகள் பயன்பெற்றனர்,மேலும் நோய்க்கான மருந்து மற்றும் ECG விலையின்றி வழங்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் அவர்களுக்குக்கான பேருந்து வசதி,மருத்துவ மற்றும் மருந்து வசதி ஆகியவற்றை விலையின்றி வழங்கப்பட்டது. இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கி வைத்தார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார்கள். மற்றும் திட்ட மேலாளர் சரவணகுமார்,லட்சுமி,அனிதா,நிவேதா பங்கேற்றனர்.”