“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 21.03.2019 அன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 5000கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.. இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் இந்த சேவையை தொடங்கி வைத்தார்கள். செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார்.”