“25.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கார்மாங்குடி கிராமத்தில் தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து,அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார்கள் மற்றும் கார்மாங்குடி வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் அவர்கள் உடனிருந்தனர் மேலும் செயல் மற்றும் திட்ட மேலாளர்கள் திரு.S.ஸ்டாலின் மற்றும் சரவணகுமார் இணைந்து நடத்தினார்கள்,மேலாளர் மணிபாலன் இளையராஜா பங்கேற்றனர்.”