USACC Organized

உலக மகளிர் தினம்

“விருத்தாசலம் 07.03.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BSS MART கல்வி மையம் இணைந்து உலக மகளிர் தின விழா நடந்தது. உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விருத்தாசலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட சுய தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.M.சங்கவி முருகதாஸ் அவர்கள்  – MBBS,C.Diab நகர மன்ற தலைவர், விருத்தாசலம்,J. கிருபாலக்ஷ்மி – M.A அவர்கள்  அனைத்து மகளிர் காவல் நிலையம்,திட்டக்குடி மற்றும் டாக்டர்.M.பானுமதி – அவர்கள் MBBS,DGO,விருத்தாசலம் அரசு மருத்துவமனை ஆகியோர் கலந்து கொண்டு கிராம பெண்களுக்கு சிறப்புரை வழங்கினார்கள். ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின்   தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தலைமை தாங்கி நடத்தினார்கள். மேலும் பெண் குழந்தையின் சிறப்பு பற்றி சிறப்புரை வழங்கினார். ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் –அவர்கள் நன்றியுரையாக  பெண்களின் உரிமை சட்டத்தின் சிறப்புரை வழங்கினார். மேலும் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் புடவை மற்றும் மதிய உனவு இலவசமாக வழங்கப்பட்டது. செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த விழாவில் தனது பங்கை வழங்கினார், மேலும் திட்ட மேலாளர் S.சரவணகுமார் மற்றும் , மணிபாலன், அருண்குமார், ஹஜ்ஜி முகமது மாரிமுத்து, சண்முகம், பிரேம்குமார், சூரியா , சீதா, லட்சுமி, கலைசெல்வி, அனிதா, சரண்யா, கீர்த்தனா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்”

All we do is lending an extra hand to people in distress. We are the First Respondents and carry out relief activities in the event of a Natural Disaster. USACC also does a wide range of Social Welfare activities with our only motto being uplifting the lives of Poor and Giving Hopes to the Hope less.

© USSAC-2020 | Designed by Hakku Corp Pvt Ltd.,