“சுத்தமான வெள்ளாடை உடுத்தி மாசற்ற மலர் புன்னகையுடன் மனதிற்கும்,உடலுக்கும்,மருந்து தரும் செவிலியரின் மணமார்ந்த சேவையில் வாழ்கிறது உலகம்”
“மருத்துவருக்கு தோளோடு தோலாக மற்றும் நோய்யாளிகளுக்கு பக்கபலமாக இருக்கும் செவிலியருக்கு உலக செவிலியர் தின வாழ்த்துக்கள். 12.05.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு விருத்தாச்சலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவியில் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள்”